மாணவனிடம் சில்மிஷம் : பாதிரியார் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் ராஜதுரை(15) தச்சங்குறிச்சியில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து பஸ்சுக்காக சக மாணவர்களுடன் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு பாதிரியாரிடம் ராஜதுரை லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார். சிறிது தொலைவு சென்றவுடன் மாணவன் ராஜதுரையை பைக்கின் முன்புறம் அமர வைத்து பாதிரியார் பைக்கை ஓட்டினார். அப்போது மாணவனை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப் பது உள்ளிட்ட சில்மிஷங்களில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ந்து போன ராஜதுரை கோமாபுரம் பஸ் நிறுத்தம் வந்தவுடன், சாவியை எடுத்து பைக்கை ஆப் செய்து விட்டு, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதனால் சுதாரித்துக்கொண்ட பாதிரியார், மாணவரிடமிருந்து சாவியை பறித்து மீண்டும் பைக்கை வேகமாக கிளப்பிச்சென்றார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் கந்தர்வகோட்டையில் உள்ள டாக்சி ஸ்டாண்டுக்கு தகவல் கொடுத்தனர். ஒரு சிலர் பைக்கில் விரட்டினர். கந்தர்வகோட்டை டாக்சி ஸ்டாண்டு அருகே பைக் கில் விர ட்டி வந்தவர்கள் பாதிரியாரை, மாணவனுடன் மடக்கினர். பாதிரி யாரை பிடித்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் எஸ்.ஐ. கேசவமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அவரது பெயர் ஜார்ஜ் ஸ்டீபன்(40) என்பதும், தஞ்சை மறை மாவட்டத்தில் பாதிரியாராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மாணவனிடம் முறைதவறி நடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.