முடிவுக்கு வந்தது மீனவர்களின் தொடர் போராட்டம்
ராமேஸ்வரம் பகுதியில் மீன் வியாபாரிகள் ஒன்று கூடி, தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு மிக குறைந்த விலை நிர்ணயிப்பதை கண்டித்தும் அரசே எங்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க கோரியும் கடந்த 13 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த் தையில் மீன்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக் கப்படும் என்ற அமைச்சரின் உறுதிமொழியால் இன்று போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது என்று அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் கடற்பகுதியில் 600 படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.