சிறுமியை சிறுநீர் குடிக்கவைத்த சம்பவ வழக்கு :
பிரதமருக்கு கோர்ட் நோட்டீஸ்

மாணவியின் பெற்றோர்
மேற்கு வங்க மாநிலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் சனிக்கிழமை, அந்த பள்ளி விடுதி ஒன்றில் 5-ம் வகுப்பு மாணவி தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள். இதை அறிந்த அந்த பள்ளி விடுதி வார்டன் உமா கடும் கோபம் அடைந்தார்.
இதையடுத்து மாணவியை படுக்கையில் இருந்த சிறுநீரை குடிக்கும்படி வார்டன் உமா அடித்தார். மாணவியும் அடிக்கு பயந்து அவ்வாறே செய்தார். இந்த சம்பவத்தை மாணவியின் பெற்றோரிடமே, வார்டன் உமா கூறியுள்ளார்.

வார்டன் உமா
இதைக்கேட்டுஅவர்கள் கொதித்தெழுந்தனர். மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாடெங் கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து வார்டன் உமா கைதானார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. மாணவிக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருப்பது, கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்று கூறப்பட்டது.
கொல்கத்தா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மாணவி படித்த பள்ளியை நடத்தும் பல்கலை க்கழகத்துக்கு பிரதமர் தான், வேந்தர் என்பதால் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகந்தா தத் குப்தா, பதிவாளர் மணி முகுத் மிஸ்ரா, வார்டன் உமா, மேற்கு வங்க கல்வி துறை செயலாளர் பைக்ராம் சென் ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 27-ந்தேதி நடைபெற உள்ளது.