மது விருந்து மோதல் :முன்ஜாமீன் கேட்டு நடிகர் மனு தாக்கல்
சென்னையில் நடிகர் ஒருவர் கடந்த 7-ந் தேதி மது விருந்து நிகழ்ச்சி நடத்தினார். அப்போது நடிகர்கள் மஞ்சு என்ற மனோஜ் மற்றும் மகத் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் பற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனோஜ் மனுதாக்கல் செய்தார். அவர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார். அவர்களுக்குள் சண்டை எதுவும் நடக்கவில்லை என்றும் நடந்தது வாய்த்தகராறுதான் என்றும் அவர் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இந்த மனு தொடர்பாக 16-ந் தேதி போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.