பெரியார் தி.க. பிரமுகர் பழனிச்சாமி கொலை: கோவை நீதிமன்றத்தில் 3 பேர் சரண் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த அலேசீபம் ஊராட்சி பாலே குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் பழனி என்ற பழனிச்சாமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டித்தும் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமச்சந்திரன். அவரது அண்ணன் வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா, கெலமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், பெரியசாமி, சப்படி முனிராஜ், சாதப்பா ,உள்பட 22 பேரை தேடி வந்தனர். தளி எம்.எல்.ஏ. 5 வது நாளாக தலைமறைவாக உள்ளார். அவரை பிடிப்பதற்காக போலீசார் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் கோவை கோர்ட்டில் முரளி, மஞ்சுநாத் மற்றும் வீரமணி ஆகிய 3 பேர் சரணடைந்துள்ளனர். இதையடுத்து இவர்களை கோவை மத்திய ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.