சஞ்சய் ஜோஷிக்குக் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு ப. சிதம்பரத்துக்கு கடிதம்
தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைச் சேர்ந்த தலைவரான சஞ்சய் ஜோஷி இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய சஞ்சய் ஜோஷி, தனக்கு அடையாளம் தெரியாத நபர்கள் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அதனால் தனக்குப் பாதுகாப்பு அளிக்கும்படியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
3 செல்போன் எண்கள் மூலமாக தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் கொலை மிரட்டல்கள் வருவதாக ஜோஷி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.