மேட்டூர் அணையை தற்போது திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் 09.07.2012 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மேட்டூர் அணையை அதிமுக அரசு திறந்து விட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், மேட்டூர் அணையை தற்போது திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டுள்ளதே தவிர, டெல்டா மாவட்ட பாசன தேவைகளுக்காக அல்ல என்று கூறியுள்ளார்.