எட்டாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
இறால் மீன் விலை வீழ்ச்சியால், வேலை நிறுத்தம் செய்துள்ள ராமேஸ்வரம் மீனவர்களிடம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இன்றுடன், எட்டாவது நாளாக, கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இறால் மீன் விலை, கிலோவிற்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைந்ததால், நஷ்டத்தை தவிர்க்க, மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதனால், படகுகள் அனைத்தும், மீன் பிடிக்க செல்லாமல், கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனி டையே, ராமநாதபுரம் கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோரது தலைமையில், இறால் மீன் ஏற்றுமதியாளர்கள், படகு உரிமையாளர்கள், மீனவர்கள் பங்கேற்ற கூட்டங்களில், எவ்வித உடன்படிக்கையும் ஏற்படவில்லை.
வெளிநாடுகளில், இறால் மீன்களுக்கு விலை குறைந்துள்ளதாலும், வேறு மாநிலங்களில், பண் ணையில் வளர்க்கப்படும் இறால் மீன்கள், குறைந்த விலையில் கிடைப்பதாலும், ஏற்றுமதியாளர்கள் தமிழகத்தில் குறைந்த விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
இதனால், தமிழகம் முழுவதும், மீன்பிடித் தொழில் நலிவடையும் வாய்ப்பு உருவாகிவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களது வேலை நிறுத்தம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.