அண்மைச் செய்திகள்
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) ||
இந்தியா
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
நிதிஷ் குமார் பற்றி பிரதமர் கருத்து: பாரதீய ஜனதா கண்டனம்
......................................
அரசியலில் யாரும் நிரந்தரமான நண்பர் மற்றும் எதிரி கிடையாது; மன்மோகன் சிங்
......................................
பாஜக அரசு அமைவது உறுதி: வெங்கய்ய நாயுடு
......................................
பாலியல் கொடுமைக்கு பலியான மாணவியின் வீட்டிற்கு பைக்கில் சென்ற மம்தா பானர்ஜி (படம்)
......................................
பதவியேற்றுக்கொண்ட 8 புதிய அமைச்சர்களின் இலாகா விபரம்!
......................................
மத்திய இணையமைச்சரானார் சுதர்சன நாச்சியப்பன்!
......................................
இரண்டு போலீசார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: மன அழுத்தமே காரணம்?
......................................
எம்.பி.,யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்
......................................
மத்திய அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுள்ள பெயர்கள்?
......................................
மத்திய இணை அமைச்சராகிறார் சுதர்சன நாச்சியப்பன்?
......................................
உத்தர்காண்டில் நிலச்சரிவு: 60 பேர் உயிரிழப்பு
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (8:46 IST)

மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் ; அதிர்ச்சி சம்பவம்

விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த வார்டன், அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா . இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழக கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள்.
 
இதை அறிந்த விடுதி வார்டன் ஆத்திரமடைந்து, நேற்று முன்தினம் காலை மாணவியை அழைத்து வலுக் கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.

இந்நிலையில், மாணவியின் தாயார், நேற்று முன்தினம் இரவு, விடுதி வார்டனை தொடர்பு கொண்டு, தன் மகள் எப்படி இருக்கிறார் என விசாரித்துள்ளார்.

அப்போது அவரிடம், "உங்கள் மகள் நலமாக இருக்கிறார். ஆனால், படுக்கையில் சிறுநீர் கழித்ததால், அவளுக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது' என்று, வார்டன் தெரிவித்தார்.

பதறிப்போன மாணவியின் தாய், தன் உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு, விடுதிக்குள் நுழைந்து, தன் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின், மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த, பல்கலைக் கழகம் சார்பில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.


விசுவபாரதி பல்கலைக் கழக அதிகாரிகள் இதுபற்றி, "மாணவியை சிறுநீர் குடிக்குமாறு விடுதி காப்பாளர் வற்புறுத்தவில்லை. மாறாக, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, மாணவியை அவளது படுக்கை விரிப்பை நாக்கால் நக்கி சுத்தம் செய்யச் சொன்னார். இது தான் நடந்தது' என்றனர்.இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :