பழனி: மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 500 திமுகவினர் கைது
பால் விலை, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
அதன்படி இன்று பழனியில் தாலுகா அலுவலகம் முன்பு தாராபுரம் ரோட்டில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். பஸ் மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 500 பேரையும் போலீசார் கைது செய்தனர். 5க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் கைது செய்யப்பட்ட திமுகவினரை போலீசார் அடைத்தனர்.