திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஆயிரம் பேர் கைது
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறை நிரப்பும் போராட்டத்திற்காக திமுக சார்பில் திருவண்ணாமலை, போளூர், செங்கம், ஆரணி, வந்தவாசி, செய்யாறு போன்ற பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.