பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் கைதாக வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட கே.என்.நேரு!
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி இன்று திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமைல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட கே.என்.நேரு உள்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைதாக வந்த பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை பார்த்து தனியே அழைத்து நீங்கள் கைதாக வேண்டாம். வீட்டிற்குச் செல்லுங்கள் என்றார்.