முன்னாள் முதல் அமைச்சர்களின் வாரிசுகள் ஆலோசனை கூட்டம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் 03.07.2012 நடந்தது. பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஜே.எச்.பட்டீலின் மகன் மகிமா பட்டீல், குண்டுராவின் மகன் தினேஷ் குண்டுராவ், பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா, தரம்சிங்கின் மகன் அஜய்சிங், வீரேந்திர பட்டீலின் மகன் கைலாஷ்நாத் பட்டீல், ராமகிருஷ்ண ஹெக்டேயின் மகள் மமதா நிச்சானி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.