தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் அமைந்துள்ள அனல்மின் நிலையம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் திறன் வாய்ந்தது. இந்த அனல் மின் நிலையத்தில் 2 கன்வேயர் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படும். இதில் இரண்டாவது கன்வேயரில் திடீரென இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கன்வேயர் பெல்ட் கடினமான ரப்பரினால் ஆனதால் தீ வேகமாக பரவியது. உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரந்து வந்து 1/2 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கன்வேயரை சரி செய்யும் பணியில் அதிகாரிகளும் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி 3 நாட்களில் முற்றிலும் சரி செய்யப்பட்டு மின் உற்பத்திக்கு உபயோகிக் கப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்திக்காக நிலக்கரி கொண்டு செல்லும் முதல் கன்வேயரில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.