பள்ளி விடுதி மாணவியை துரத்திய வாலிபர்கள் :
பொதுமக்கள் ஆவேசம் - போலீஸ் அதிரடி
சேலம் மாவட்டம், பருத்திக்காடு அடுத்த வை.தாதனூரில், புனித கிரஹாம் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 450க்கும் மேற்பட்ட, ஆதரவற்ற மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 350க்கும் மேற்பட்டோர், விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.
ஓசூர், வெங்கடேசா நகரைச் சேர்ந்த, கணபதி மகள் ருக்மணி (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பள்ளி விடுதியில் தங்கி, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று அதிகாலை, 4 மணிக்கு, விடுதியில் இருந்து, தனியாக கழிப்பறைக்கு சென்ற அவரை, நான்கு வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால் மாணவி, பருத்திக்காட்டில் உள்ள குடிசை வீட்டில், மறைந்து கொண்டார். இதையடுத்து, நான்கு வாலிபர்களும் திரும்பிச் சென்று விட்டனர்.
பின், பருத்திக்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக்கடையில் தஞ்சமடைந்த மாணவி, அங்கிருந் தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, பள்ளியை முற்றுகை இட்டனர்.
தகவலறிந்த வீராணம் போலீசார், பள்ளிக்கு சென்று, முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, மாணவியிடம் நடத்திய விசாரணையில், பள்ளியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வரும் ஊத்தங்கரை அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சுப்ரமணி, 33, உள்பட நான்கு பேர், மாணவியை துரத்தியது தெரிந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து, சுப்ரமணியை கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.