சென்னையில் ரோட்டில் அனாதையாக வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை - மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனை உள்ளது. அதன் அருகே ரோட்டில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று ரோட்டோரம் வீசப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.
போலீசார் குழந்தையை மீட்டு, குளோபல் மருத்துவ மனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். பிறந்து சில மணி நேரம் ஆனதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தாம்பரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை யார், எதற்காக ரோட்டில் வீசி எறிந்தனர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.