அண்மைச் செய்திகள்
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி ||
இலங்கை
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012 (13:58 IST)



ஈழத்துக்கு தமிழகம் குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? சிங்கள அமைச்சரின் திமிர் பேச்சு

தமிழீழத்துக்காக இந்தியா குரல்கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும் என்று அந்நாட்டின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பிரிவினைவாத சக்திகளின் பேச்சைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவைத் தேடிக் கொள்ளக்கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்கக் கூடாது. இதை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என சம்பிக்க குறிப்பிட்டார்.


இலங்கையில் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பலமுறை கூறியும் கேட்க மறுக்கின்றனர். எனினும் கருணாநிதி, சீமான், வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இனி இலங்கையில் நிறைவேறாது என அவர் தெரிவித்தார்.

பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது குறித்து சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், ௭னக்கு ௭திராக கடந்த வாரத்தில் தமிழகத்தில் ௭திர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை வைகோ, சீமான் மற்றும் கலைஞர் போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் இலங்கையின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலேயே செயற்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : kartheesan Country : Turkey Date :6/27/2012 12:15:40 PM
கவலை வேண்டாம் சகோதரரே, இந்தியாவை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான், இந்தியாவை எதிர்த்து இலங்கையை ஆண்டவன் ஒருவனுமில்லை, என்பதே உண்மை. உங்கள் பக்செவிற்க்கும் கூடிய விரைவில் இந்தியாவின் உண்மை சொருபம் தெரியும், அப்போது நீங்கள் யாரும் இருப்பதில்லை.
Name : Hari Country : United Kingdom Date :6/26/2012 4:30:10 PM
Champika Ranavaka is a rasist idiot. who is going to listen to him except some other idiots like him. if india been honest from the begining this kind of idiots never open his mouth
Name : peyarilla Country : United Kingdom Date :6/26/2012 4:17:51 PM
ஈழத்தில் இனி அழியும் அளவுக்கு தமிழர்கள் இல்லை.தமிழரின் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வந்தால் அங்கு உள்ள சிங்களவருக்கு தான் அழிவுகள் ஏற்படும்.ஒரே வீட்டில் வாழும் கடின உழைப்பாளி தம்பியை அடிக்கடி மிரட்டி,அடித்து அவனிடம் உள்ள பொருளை பறித்து வாழ்க்கை நடத்தும் அண்ணன் போல தான் சிங்கள பேரினவாதம்.அடிக்கடி இனக்கலவரம் ஏற்படுத்தி தமிழரின் செல்வம் சூறை ஆடப்படுவது தொடர் கதை.மீண்டும் தம்பி தழைக்கும் போது அவனை கொள்ளை அடிப்பது அண்ணன் கதை.இன்று தம்பி தாழ்ந்து விட்டான்,அவன் வங்கியில் உள்ள பணம்,அவன் காணிகள் அபகரிப்பு,சுற்றிலும் சிங்கள குடி ஏற்றம் ,அவன் சொந்த நாட்டில் அகதி ஆக்கப்பட்டு விட்டான்.அண்டை மாநிலம் தமிழ்நாடு தான் அவனுக்கு கை கொடுக்க வேண்டும்.இல்லை வரலாறு சிங்கள தீவினில் தமிழர் என்று ஒரு இனம் இருந்தது ஆனால் அது பேரினவாதம் என்ற சிங்கள பாசிசவாதிகளினால் பயங்கரவாதம் என்ற போர்வையில் முற்றாக துடைத்து எறியப்பட்டது என்று படிக்க வேண்டி வரும். இன்று ஈழத்தில் நடந்தது நாளை உங்களுக்கு வராது என்பது என்ன நிச்சயம்,மாறும் உலக ஒழுங்கில் எதுவும் சாத்தியமே.விழித்து எழு தமிழகமே, தமிழ் அழிவின் விளிம்பில் உள்ளது.
Name : G.Soundar Rajan Country : Australia Date :6/26/2012 3:38:43 PM
தமிழன் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிறான். காலமும் நேரமமும் வரும் அபொழுது வஞ்சகர்கள் புரிந்துகொள்ள நேரமில்லாமல் அழிந்துபோவர்கள். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும். காத்திருப்போம் !
Name : nageswaran Country : Malaysia Date :6/26/2012 3:30:49 PM
தமிழர்களை யார் வேண்டுமானாலும் கொல்லலாம்.இதுதான் விதி.என்ன கொடுமை இது.