மதுரை ஆதின மட சோதனையில் அதிமுக கவுன்சிலர்: மடத்திற்குள் சலசலப்பு
மதுரை ஆதின மடத்திற்குள் விளக்குத்தூண் போலீசார் மற்றும் வனத்துறையினர் இன்று (26.06.2012) சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்ய வந்த அதிகாரிகளுடன், அப்பகுதி அதிமுக கவுன்சிலர் குமார் என்பவரும் மடத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது நித்தி சீடர்கள் அவரை வெளியேற்றுமாறு போலீசாரிடம் கூறினர். அவரை சாட்சிக்காக அழைத்து வந்துள்ளோம் என்று லோக்கல் போலீசார் தெரிவித்த பின்பு, வெளியேற்றும் பேச்சை நிறுத்தினர் நித்தி சீடர்கள்.
சோதனை நடக்கும்போது அதிமுக கவுன்சிலர் உள்ளே இருந்தது, அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.