மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலிநாகை மாவட்டம் தேத்தாக்குடி அருகே இன்று மாலை நடைபெற்ற மூதாட்டி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில், ஊர்வல வாகனத்தில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தின் மீது தாழ்வாகச் சென்ற உயர் மின்அழுத்த மின்கம்பி உரசியதில், மின் கசிவு ஏற்பட்டது. இதில், வாகனத்தில் மின்சாரம் பாய்ந்தது.
இந்த விபத்தில் இறுதி ஊர்வலத்தில் வாகனத்தை எடுத்துச் சென்ற செம்போடையைச் சேர்ந்த முருகையன் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.