திண்டிவனத்தில் தற்காலிகமாக நிற்கும் சென்னை திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுமக்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து சென்னை எழும்பூர் திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்கள் 16853/16854) தற்காலிகமாக திண்டிவனத்தில் 10.7.2012 முதல் 9.1.2013 வரை 6 மாத காலத்திற்கு நின்று செல்லும். இதே போல் சென்னை எழும்பூர் புதுச்சேரி பயணிகள் ரெயில் (வ.எண்கள் 56037/56038) தற்காலிகமாக முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மேற்குறிப்பிட்ட தேதியில் 6 மாத காலத்திற்கு நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.