காதலியை மணக்கவிருந்தவர் மீது ஆசிட் வீச்சு! காதலர் கைது!
உத்தரப் பிரதேசத்தின் சியோஹரா பகுதியில் உள்ள ரதன்பூர் கிராமத்தில் தனது காதலியை மணக்கவிருந்தவர் மீது காதலர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இதில் 2 குழந்தைகளும் காதலியை திருமணம் செய்துகொள்ளவிருந்தவரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ராஜாராம் என்பவர் தனது காதலியை திருமணம் செய்துகொள்ளவிருந்த அரவிந்த் குமார் என்பவரை முன்னதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவர் கேட்காததால் அவர் மீது (24.06.2012) ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இதில் அரவிந்துக்கு வலது கண்பார்வை பறிபோனது. மேலும் அருகில் நின்றுகொண்டிருந்த ஆதித்யா(14), நகுல்(11) ஆகியோரும் காயமடைந்தனர். இதையடுத்து ஆசிட் வீசிய ராஜாராமை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.