சென்னையில் நடுரோட்டில் வாலிபர் படுகொலை
சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலணியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் மகன் ராஜேந்திரன் (28). குட்டியானை எனப்படும் டாடா ஏசியின் டிரைவராக இருந்தார். வழக்கம்போல இன்று (25.06.2012) காலை வீட்டிலிருந்து புறப்பட்டு வண்டி ஓட்ட சென்றார். இரவு 7 மணி அளவில் ராஜேந்திரன் சூளைமேடு பெரியார் சாலையில் ஒரு வீட்டின் முன்பாக பிணமாக கிடந்துள்ளார்.
அவரது மார்பிலும் வயிற்றிலும் ஆழமான கத்திக்குத்து காயங்கள் இருந்தது. கோடம்பாக்கம் வாலிபர் சூளைமேட்டில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.