செல்போன் மூலம் ரயில் டிக்கெட் செய்வதில் ஏற்படும் முறைகேடுகள் கண்காணிக்கப்படும்: கே.எச். முனியப்பா
செல்போன் மூலம் ரயில் பயணத்துக்கு தட்கல் முறை மூலம் முன்பதிவு பயணச்சீட்டு பெறுவதில் ஏற்படும் முறைகேடுகள் கண்காணிக்கப்பட்டு களையப்படும் என்று துணை ரயில்வே துறை அமைச்சர் கே.எச். முனியப்பா இன்று நிருபர்களிடம் கூறினார். தட்கல் மூலம் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் முறையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். உங்கள் மொபைல் போன் மூலம் நீங்கள் முன்பதிவு செய்யுங்கள். இதற்காக மற்றவர்களையோ ஏஜெண்டுகளையோ தொடர்பு கொள்ளாதீர்கள் என்றும் ரயில்வே துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த துணை ரயில்வே துறை அமைச்சர் கே.எச். முனியப்பா கூறினார்.