சிறையில் உள்ள ஜெகன்மோகனை சந்திக்க பிஏ.சங்மாவுக்கு அனுமதி மறுப்பு!
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிஏ.சங்மாவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரித்துள்ளது. மேலும் பலரை சந்தித்து பி.ஏ.சங்மா ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் சிறையில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகனை சந்திக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிஏ.சங்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசியல்ரீதியிலான சந்திப்பு என்பதால் கடைசி நிமிடத்தில் சிறை அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து ஜெகன்மோகனின் தாயார் விஜயம்மாவை சந்தித்து ஆதரவு கோரினார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு ஜெகன்மோகன் உள்ளிட்ட 2 எம்பிக்களும், 17 எம்எல்ஏக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.