சாலை விபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மகன் உயிரிழந்தார்!
சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கியதில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ளவர் செல்லூர் ராஜூ, இவரது மகன் தமிழ்மணி என்பவர் சென்னையில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது என்.எஸ்.சி. சாலையில் உள்ள வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் சென்றதால் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இன்று (25.06.2012) மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளைஞர்களை கவரும் வகையில், அதிவேகத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை போட்டிப்போட்டுக்கொண்டு பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இளைஞர்கள் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதுடன் செல்போனில் பேசிக்கொண்டும், தலைக்கவசம் அணியாமலும் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.
அமைச்சர் செல்லூர் ராஜூ மகனும் தலைகவசம் அணியாமலும், செல்போனில் பேசியப்படியும் சென்றுள்ளார். செல்போனில் பேசியப்படி சென்றதால் வேகத்தடையை கவனிக்கவில்லை. மேலும் தலைக்கவசம் அணியாததால் விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.