அழுகைதான் வெற்றியைத் தேடித் தந்தது! சோனியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்!
ஆந்திர மாநில இடைததேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெருவாரியான வெற்றி பெற்றதற்கு, முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமியின் அழுகைதான் காரணம் என்று குண்டூர் எம்.பியான ராயபட்டி சாம்பசிவ ராவ் இன்று (25.06.2012) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
2009ல் தனது கணவர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்தும் தனது மகன் ஜெகன்மோகன் ரெட்டி பொய்யான ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது குறித்தும் மேடைதோறும் அழுது புலம்பியது பெண்களிடையே ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் ராயபட்டி சாம்பசிவ ராவ் குறிப்பிட்டிருந்தார்.