அறந்தாங்கியில் ஆசிரியை வெட்டிக்கொலை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வானதி (வயது 46) தங்கி இருந்தார். இவர் பம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவரது கணவர் முத்து காமாட்சி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இன்று (25.06.2012) காலை வானதி தங்கி இருந்த வீடு நீண்ட நேரமாகியும் திறக்கபடவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அறந்தாங்கி போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அங்கு வானதி கழுத்து மற்றும் கால்களில் வெட்டு பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்சந்திரன் பார்வையிட்டார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.