ஏர் இந்தியா விமானிகள் நிபந்தனையற்ற முறையில் பணிக்கு திரும்ப வேண்டும்: அஜித் சிங்
ஏர் இந்தியா விமானிகள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அஜித் சிங் கூறும்போது, அவர்கள் நிபந்தனையற்ற முறையில் பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை. உயர் நீதிமன்றம் இதனை சட்டவிரோதம் என கூறியுள்ளது. அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. அவர்களை பற்றி அவர்களுக்கே தெரியவில்லை. எனவே நாங்கள் என்ன செய்ய இயலும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் இந்திய விமானிகள் சங்கத்தின் இணை செயலாளர் டாசீப் முகாதம் கூறுகையில், மந்திரி மற்றும் நிர்வாகம் ஆளுக்கொரு கருத்துகளை கூறுகின்றனர். இவர்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு இருப்பது தெளிவாகிறது என கூறினார்.