நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
தகுதித் தேர்வைக் கண்டித்து தமிழகத்தில் தனியார் மருத்துவர்கள் இன்று (25.06.2012) வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
எம்பிபிஎஸ் படித்தவர்கள் மருத்துவராக பதிவு செய்ய தகுதித் தேர்வு எழுத அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தல் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மூன்றரை ஆண்டு கிராமங்களில் பணியாற்ற வேண்டுமென்பதற்கும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.