விலைவாசி உயர்வுக்கு பிரணாப் முகர்ஜிதான் பொறுப்பு: பி.ஏ.சங்மா
ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா (24.06.2012) அமிர்தசரஸ் நகருக்கு சென்றபோது அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பிரணாப் முகர்ஜியை கடுமையாக தாக்கினார்.
நாட்டில் விலைவாசி உயர்ந்ததற்கும், ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும், ஊழல் பெருகி பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கும் பிரதமருக்கும் மந்திரி சபைக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது என்ற போதிலும், தனிப்பட்ட வகையில் நிதி மந்திரி என்ற முறையில் பிரணாப் முகர்ஜிதான் இதற்கு பொறுப்பு ஆவார் என்று அப்போது அவர் கூறினார்.