அண்மைச் செய்திகள்
சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் || தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம் || ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி ||
இந்தியா
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (8:11 IST)



சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!



தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 19 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் தற்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார்.


அவருக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.


பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சிகளால் முன்நிறுத்தப்பட்ட பி.ஏ.சங்மாவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்கிறது.

இதனால் தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.


இதில் காரிய கமிட்டி உறுப்பினரான பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் அவர், நிதி மந்திரி பதவியை நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்கிறார். இதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். எனவே அவர் கலந்து கொள்ளும் கடைசி காரிய கமிட்டி கூட்டம் இதுவாகத்தான் இருக்கும். எனவே இந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நடத்தப்படுகிறது. மேலும், காரிய கமிட்டி உறுப்பினராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


காரிய கமிட்டி கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றியும், பிரணாப் முகர்ஜியை வெற்றி பெறச் செய்வது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் ஆதரவை பெறுவது பற்றியும், இதுவரை முடிவு செய்யாத கட்சிகளின் ஆதரவை கேட்டு பெறுவது பற்றியும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :