| ஜூன் 2012 | | ஞா | திங் | செ | புதன் | வியா | வெ | சனி | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
|
|
|
|
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (22:58 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் அப்ரிடி 2015-ல் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அறிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டரான அப்ரிடி, இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் வெறும் 28 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளே எடுத்துள்ளார். இத்தொடரில் இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி 1-3 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை இழந்துள்ளது. தனது மோசமான ஆட்டம் பற்றி பேசிய அப்ரிடி, ‘நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. மோசமான பார்ம் காரணமாக நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளேன்.
இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில் ஓய்வு முடிவை வெளியிடுவேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் நான் தொடர்ந்து ஆடுவேன். இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே நான் ஓய்வுபெற உள்ளேன். அப்போதுதான் 2015-ல் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிகளுக்கு சிறந்த பாகிஸ்தான் அணியை அனுப்ப முடியும்’ என்றார்.
|