தமிழகத்தில் 300 இடங்களில் பாஜக மறியல் போராட்டம்
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ மத்திய அரசு, பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், மாநில உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 இடங்களில் மறியல் போராட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது’’ என்று கூறியுள்ளார்.