மிகப்பெரிய சவால் எனக்கு காத்திருக்கிறது: யுவராஜ் சிங்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமாகியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், செப்டம்பரில் நடைபெற உள்ள சர்வதேச டி20 போட்டியில் அணிக்கு திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். எனினும் அதுவே பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக விளையாடும் மிகப்பெரிய சவால் எனக்கு காத்திருக்கிறது. என்னுடைய உடம்பில் ஏற்படும் அதிர்வுகளை என்னை தவிர மற்றவர்கள் உணர முடியாது.
புற்றுநோயாளி ஒருவர்தான் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவார். எனவே, இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் மிகப்பெரிய சவால் எனக்கு காத்திருக்கிறது.
நான் இதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. எவ்வளவு சீக்கிரம் எனது உடல்நிலை தேறுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் இந்திய அணிக்காக மீண்டும் களத்தில் இறங்குவேன். தற்போது 75 சதவிகிதம் உடல் தகுதி பெற்றுள்ளது.
இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ எனக்கு தெரியாது. மீண்டும் 100 சதவிகித உடல் தகுதியுடன் விளையாட வருவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று கூறியுள்ளார்.