தமிழக தலைமைச்செயலகத்தை இடமாற்றும் விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழக தலைமைச்செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே இடமாற்றும் விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தலைமைச்செயலகத்தை புதிய கட்டடத்திலிருந்து இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று ஜே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.கோகலே மற்றும் ரஞ்சன பிரசாத் தேசாய் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இந்த பிரச்னை நிலுவையில் இருக்கும்போது நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். உயர்நீதிமன்றத்திலேயே உங்களது மனுவைத் தாக்கல் செய்து வாதாடுங்கள் என்று ரமேஷுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.