நடிகை ரஞ்சிதா விவகாரம் :நித்திக்கு ரத்தபரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவு
பெங்களூரு பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா தொடர்பாக ரத்தமாதிரி எடுக்க கோரி பெங்களூரு ராம்நகர் கோர்டில் சி.ஐ.டி. போலீஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் 8 முறை நோட்டீஸ் அனுப்பியும் நித்யானந்தா தரப்பில் ஆஜராகவில்லை. இந்நி லையில் இன்று நடந்த விசாரணையில், நித்யானந்தா தனது ரத்தமாதிரி, மற்றும் குரல் முதலிய வற்றை பரிசோதனை செய்ய வேண்டும் என சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி புஷ்பாவதி உத்தரவிட்டுள்ளார்.