திருவண்ணாமலையில் நித்தி ரகசிய ஆலோசனை
பெங்களூரில் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா கடந்த 15ம் தேதி ஜாமீனில் விடுத லையானார். பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டதால் நித்யானந்தா அங்கு தங்க முடியவில்லை. இதையடுத்து அவர், கடந்த 16ம்தேதி மதுரை ஆதீன மடத்துக்கு வந்தார். அங்கு அவர் தங்குவதற்கு ஆதின மீட்பு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் தி.மலையில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு வந்தார்.கடந்த 2 நாட்களாக தி.மலை ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா தன் மீதுள்ள வழக்குகள் குறித்து விஐபிக்கள் பலரிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரமத்தில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் நித்யானந்தா நேற்றிரவு திருவண்ணாமலையில் இருந்து திடீரென புறப்பட்டு சென்றதாக அவரது சீடர் ஒருவர் கூறினார். அவர் மதுரை சென்றாரா அல்லது பெங்களூருக்கு சென்றாரா என தெரியவில்லை.