தாய், மகளை கற்பழித்து கொன்றவனுக்கு மரண தண்டனை
கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்த மோலி (55) மீனுமோல் (22) இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது வண்டி பெரியாரை சேர்ந்த ராஜேந்திரன், ஜோமோன் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து தாய்-மகள் இருவரையும் கற்பழித்து அரிவாளால் வெட்டியும் கம்பியால் தாக்கியும் கொலை செய்தனர்.
இந்த வழக்கு தொடுபுழா கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் குற்றவாளி ராஜேந்திரனுக்கு இன்று மரணதண்டனை விதித்து நீதிபதி மாத்துகுட்டி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி ஜோமோன் தலைமறைவானதால் அவனிடம் விசாரணை நடைபெறவில்லை.