சிரிப்பு கிளப்புக்குத் தடை விதித்தது நீதிமன்றம்
இந்தியாவில் பல இடங்களில் சிரிப்பு கிளப்புகள் அமைத்து, கடற்கரையிலும் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் ஒன்றுசேர்ந்து பலர் சிரிப்பு யோகாவை செய்து வருகின்றனர். அதிகாலையில் இதுபோன்று செய்வதால் எங்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்றும், எங்களுக்கு மனவேதனையையும் வலியையும் தருகிறது என்றும் 78 வயதான ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பொதுநல வழக்கு ஒன்றை விநாயக் சிர்சாத் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, மும்பையில் சிரிப்பு கிளப்புக்கு நேற்று தடை விதித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.