தோழியுடன் ராகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு நேற்று 42-வது பிறந்தநாள் ஆகும். சோனியாவின் வீட்டின் முன்பும், டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பும் குவிந்த காங்கிரசார் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் ராகுலின் பிறந்தநாளை கொண்டாடினர்.
அதேபோல் ராகுல் வென்ற உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், ராகுல்காந்தியோ தனது பிறந்தநாளை கொண்டாட லண்டனுக்கு போய் விட்டார். தனது நீண்ட நாள் ஸ்பெயின் நாட்டு தோழியுடன் அவர் பிறந்த நாள் கொண்டாடியதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு ராகுலின் பிறந்தநாளை “விவசாயிகள் உரிமை தினமாக” அறிவித்து காங்கிரசார் கொண்டாடினர். ஆனால், இந்த ஆண்டு அப்படி எதுவும் அறிவிப்பு இல்லை. நிருபர்களை சந்தித்த ராகுலின் ஆலோசகரும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுல் காந்தியிடம் உண்டு என்றார்.