ரோசய்யாவிற்கு ஆந்திர கோர்ட் சம்மன்
அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு அளித்ததாகவும், அதனால் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் தமிழக கவர்னர் ரோசைய்யாவிற்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளித்த ரோசைய்யா, தனக்கு இதுவரை எந்த சம்மனும் கோர்ட் மூலம் வரவில்லை எனவும், அப்படி வந்தால் அதற்கு சட்டப்படி பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.