| ஜூன் 2012 | | ஞா | திங் | செ | புதன் | வியா | வெ | சனி | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
|
|
|
|
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (10:20 IST)
 ""இந்த ஆட்சியில் இதுதானே நடக்கும். இங்கே சட்டமாவது நீதியாவது?
சர்வாதிகாரம்தான். அதைத்தானே அவர் தன் எழுத்துகளில் சொன்னார். அவருக்காக
நாங்கள் வந்திருக்கிறோம். என்ன இடையூறு வந்தாலும் விழாவை நடத்துவோம்''
என்றபடி வெட்டவெளி யில் உட்கார்ந்தனர் பத்திரிகையாளர்களும் வாசகர்களும்
கட்சிப்பிரமுகர்களும் பொதுமக்களு மான இருநூறுக்கும் மேற்பட்டோர். அவர்கள்
உட்கார்ந்த இடம், சென்னை நூலக ஆணைக்குழு (எல்.எல்.ஏ) கட்டட வளாகம். அந்த
வெட்ட வெளியிலேயே தொடங்கியது மூத்த பத்திரிகை யாளர் சின்னகுத்தூசி நினைவாக
செயல்படும் அறக்கட்டளையின் பரிசளிப்பு விழா.சின்னகுத்தூசியின்
78-வது பிறந்தநாளையும் அவரது பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர்
விருது மற்றும் சிறந்த கட்டுரைகளுக்கானப் பரிசளிப்பு விழாவையும் கொண்
டாடுவதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.எல்.ஏ கட்டடத்தில் இருக்கும்
தேவ நேயப் பாவாணர் அரங்கத்தை முன்பதிவு செய்திருந்தனர் அறக்கட்டளை
நிர்வாகத்தினர். அதற்குரிய பணம் செலுத்தப்பட்டு, அழைப்பிதழ் உள்ளிட்ட
ஆவணங்கள் தரப்பட்டு, ரசீதும் பெறப் பட்டிருந்தன. இந்த நிலையில்தான் விழா
நாளான ஜூன் 15 அன்று, அரங்கத் திற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது என
அறக் கட்டளை உறுப்பினரிடம் அதிகாரிகள் தரப்பிலிருந்து வாய்மொழியாகத் தெரி
விக்கப்பட்டது. என்ன
காரணத்திற்காக அனுமதி ரத்து செய்யப்படுகிறது என அறக்கட்டளையினர்
கேட்டபோது, உரிய முறையில் பதில் இல்லை. நூலக ஆணைக்குழு வட்டாரத்தினரோ,
""இதில் அரசியல் காரணம் இருக்குதுங்க. வாசலில் விழாவுக்கான பேனர் வச்சதுமே,
உளவுத்துறையினர் நோட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. சின்னகுத்தூசி படம் அவங்க
கண்ணை உறுத்தியிருக்கு. அதோடு விழாவில் நக்கீரன் ஆசிரியர், திருச்சி
செல்வேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்டவங்க கலந்துக்கிறதையும் அவங்க
ஏதோ அரசியல் கண் ணோட்டத்தோடதான் பார்த்தாங்க. பெரியவர் நல்ல கண்ணு
அய்யாதான் விழாவில் சிறப்புரைன்னு போட்டிருந்ததை நாங்களும் பார்த்தோம்.
அவர் கலந் துக்கிற விழான்னா அது நிச்சயமா நல்ல விழாவாத் தான் இருக்கும்.
அப்படியிருந்தும் அரங்கத்தைக் கொ டுக்கக்கூடாதுன்னு எங்களுக்கு
மேலிடத்திலிருந்து உத்தரவு'' என்றார்கள் பதட்டமும் படபடப்புமாக.அமைச்சர்
சிவபதியிடமிருந்தே நேரடி உத்தரவு வந்திருக்கிறது என்கிறது கோட்டை வட்
டாரம். ""விழா அன்னைக்கு காலையிலேயே கேன்சல் லெட்டர் கொடுத்திடுங்கன்னு
உத்தரவு வந்திடிச்சி. விழா நாளன்னைக்கு காலையிலே கலைஞர் செய்திகள் சேனலில்
நக்கீரன் தயாரித்த சின்னகுத்தூசி ஆவணப் படம் ஒளிபரப்பானதும் அதுபற்றியும்
உளவுத்துறை நோட் போக, மேலிட நெருக்கடி இன்னும் அதிகமாயிடிச்சி. உட னடியா
கேன்சல் லெட்டரைக் கொடுங் கன்னு அமைச்சர் தரப்பிலிருந்தே உத்தரவு பறந்தது''
என்கிறது அந்த வட்டாரம். விழா
நாளில், அரங்கத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சென்னை உயர்
நீதிமன்றத்தை சின்னகுத்தூசி அறக்கட்ட ளை நிர்வாகத்தினர் அணுகினர். நீதிமான்
சந்துரு முன்பாக அவசர மனு, மதியம் 1.30 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மனு வுடன் இணைக்கப்பட்டிருந்த அழைப்பித ழில் மூத்த பத்திரிகையாளர்
சின்னகுத்தூசி யின் படத்தைப் பார்த்த நீதிமான், அரசு வழக்கறிஞர் பக்கம்
திரும்பி, ""இவர் எவ்வ ளவு பெரிய பத்திரிகையாளர் என்று தெரி யுமா? திருமணமே
செய்துகொள்ளாமல் பத்திரிகையாளராக சமூகத்திற்கு உழைத் தவர். இந்த
மனுவிற்கான விளக்க அறிக்கையை ஒரு மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்''
என உத்தரவிட்டார்.அறக்கட்டளை
சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரா யணன், ஸ்டாலின் அபிமன்யு, சிவகுமார்
ஆகியோர் ஆஜ ராகி, விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்ட தால்,
தேவநேயப் பாவாணர் அரங்கிற்கான அனுமதி வழங் கப்படவேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தி வாதாடினர். அரசுத்தரப்பில் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பி.ஹெச்.
அரவிந்த் பாண்டியனும், அரசு சிறப்பு ப்ளீடர் சம்பத்குமாரும் ஆஜராகி, ""அந்த
அரங்கத்தில் அரசின் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான
பாடப்புத்தகங்கள் வழங்க இருப்பதால் அறக்கட்டளை விழா ரத்து செய்யப்பட்டது''
என்றனர். அந்த
வாதத்தை ஏற்காத நீதிமான், ""சின்னகுத்தூசி என்கிற ஒரு பத்திரிகையாளர் தன்
வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளாமல் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக திரு
வல்லிக்கேணியில் ஒரு மேன்சன் அறையில் புத்தகங்களுக்கு நடுவிலேயே
வாழ்ந்தவர். அவர் கடந்த 50 ஆண்டுகளாக இளம் பத்திரிகையாளர்களின்
என்சைக்ளோபிடியாவாகவே இருந்துள்ளார். பத்திரிகையாளர்கள், பழைய அரசியல்
நிகழ்வுகள் மற்றும் பழைய தலைவர்கள் பற்றிய சந்தேகங்களை எப்போது
வேண்டுமானாலும் அவரிடம் சென்று கேட்டுக் கொள்ளலாம். காமராஜரிலிருந்து
இன்றுள்ள பல்வேறு அர சியல் கட்சித் தலைவர்களுடனும் அவர் நெருக்கமாக இருந்த
போதிலும் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஒருபோ தும் முயன்றதில்லை.
அவரது கட்டுரைகள் அனைத்தும் சமூக அக்கறையுடன்தான் இருக்கும். அப்படிப்பட்ட
மூத்த பத்திரி கையாளர் ஒருவரது பெயரில் இளம் பத்திரிகையாளர்கள் டிரஸ்ட்
ஆரம்பித்து விழா நடத்தி உதவிகள் செய்வதை தடுப் பது சரியல்ல'' என
வாய்மொழியாகத் தெரிவித்ததுடன், ""அரங்கத்தில் விழா நடத்த மனுதாரருக்கு
அனுமதி அளிக் கப்படுகிறது. அதற்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது'' என
உத்தரவிட்டார். இந்த உத்தரவை அதிகாரிகளிடம் தெரிவித்து, விழா நடத்த ஆவன
செய்யும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடமும் தெரிவித்த நீதிமான்,
வழக்கின் விசாரணையை ஜூன் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். மாலை
4.30 மணிக்குக் கிடைத்த இந்த உத்தரவைத் தொடர்ந்து அறக்கட்டளையைச் சேர்ந்த
விழா ஏற்பாட்டாளர்கள் தேவநேயப் பாவாணர் அரங்கிற்குச் சென்றபோது, அந்த
அரங்கில் சிலர் உட்கார வைக்கப் பட்டிருந்தனர். வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி
நடப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. நீதிமான் உத்தரவை
எடுத்துச்சொன்ன விழா ஏற்பாட்டாளர்கள், மேடையில் பேனர் கட்ட முயன்றபோது,
அரங்கத்திற்கான பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தடுத்ததுடன், ""உத்தரவு நகலைக்
கொண்டு வாங்க. இப்ப இங்கிருந்து உடனே கிளம்புங்க. மேலிடத்து உத்தரவு''
என்று சொல்லி வெளியேற்றினர். அரங்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களை யும்
வெளியேறச் சொல்லிவிட்டு, உடனடியாக அரங்கிற்குப் பூட்டுப் போட்டுவிட்டு,
கிளம்பிவிட்டனர்.விழாவிற்காக
மாலை 5.30 மணியிலிருந்தே பார்வை யாளர்கள் திரள, பரிசு-விருது பெறுவோர்,
சிறப்புரை யாற்றுவோர் அனைவரும் 6 மணிக்கு அங்கே வந்து விட்டனர். அங்கிருந்த
போலீஸ் அதிகாரிகளிடம் நிலை மையையும் நீதிமன்ற உத்தரவையும் நேரில்
விளக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரான
தோழர் நல்லகண்ணு. அவர்கள் நூலக ஆணையக் குழுவில் உள்ள அரங்கத்திற்கு
பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை.
கோர்ட் உத்தரவின் நகலை நேரில் கொண்டு வந்த போதும், அதனை வாங்குவதற்கு யாரு
மில்லை. நீதிமன்றத்தை
மதிக்காத அரசு மற்றும் அதிகாரிகளின் எதேச் சதிகாரப் போக்கு அப் பட்டமாக
தெரிந்தது. பதற்றம் கூடிக் கொண்டே இருந்த நிலையில், அந்த வளாகத்திலேயே
கூட்டத்தை நடத்து வது என முடிவானது. கார் பார்க்கிங் பகுதியில் மைக் இன்றி,
பளிச் விளக்குகள் இன்றி கூட்டம் தொடங்கியது. பேச்சாளர்கள்
மேடையின்றி சாதா ரணமாக நிற்க, வெறுந்தரையில் பார்வை யாளர்கள் அத்தனை
பேரும் உட்கார்ந்திருக்க, மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி
அறக்கட்டளையின் விழா வெட்டவெளியில் கார் லைட் வெளிச்சத்தில் நடந்தது.
வாழ்நாள் சாதனையாளர் விருதும் 50ஆயிரம் ரூபாய் பரிசும் புலவர்
வெற்றியழகனுக்கு வழங்கப்பட் டது. சிறந்த கட்டுரைகளுக்கான தலா 10ஆயிரம்
ரூபாய் பரிசினை கி.இலக்குவன், பழ.அதிய மான், இரா.உமா ஆகியோர் பெற்றனர். சின்னகுத்தூசி
பற்றி நீதிமான் தெரிவித்த கருத்துகளைத் தன் வரவேற்புரையில் பதிவு செய்தார்
நக்கீரன் ஆசிரியர். ""அரங்கத்தைப் பூட்டுப்போட்டு, நீதிமன்றத்தின் உத்தரவை
அவமதித்த அதிகாரிகள் இதை அவர்களாகவே செய்தார்களா, ஆட்சியாளர்களின்
விருப்பப்படி செய்தார்களா?'' எனக் கேட்ட தோழர் நல்ல கண்ணு, பிரிட்டிஷ்
ஆட்சியின் அடக்குமுறை களை நினைவுபடுத்தும் இந்த அடாவடி செயலை வன்மையாகக்
கண்டித்துப் பேசினார். ""இந்த ஆட்சியிடம் இதைவிட பெருந்தன்மை யை
எதிர்பார்க்க முடியாது'' என ஊசி ஏற்றினார் திருச்சி செல்வேந்திரன். பரிசு
பெற்ற கட்டுரைகளின் தன்மை பற்றிப் பேசிய பேராசிரியர் சரஸ்வதியும் அரசுத்
தரப்பின் எதேச்சதிகாரப் போக்கிற்குத் தன் கண்டனத் தைப் பதிவு செய்யத்
தவறவில்லை. தலைமை யுரை ஆற்றிய திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு,
""நல்ல காற்றோட்டமான இடத்தில் கூட்டத்தை நடத்தச் செய்திருக் கிறார்கள்''
எனக் குத்திக் காட்டினார்.திறந்தவெளியில்
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விழாவும், அதற்கு வந்திருந்த வர்களின்
மன உறுதியும் சின்ன குத்தூசி என்ற மூத்த பத்திரிகையாளர் தன் எழுத்துகளால்
பலரது நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டிருப் பதையே எடுத்துக் காட்டியது.
எழுத்துப் போராளியான சின்னகுத்தூசி, தன் மரணத்திற் குப் பிறகும்
போராடியபடியேதான் இருக்கிறார்.-நமது நிருபர்படங்கள் : ஸ்டாலின் & அசோக்
|