தளபதி 3-வது முறையாக பாளை.,சிறையில் அடைப்பு
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, கடந்த சில மாதங்களுக்கு முன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை.,மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
அதுபோல் மதுரை பசுமலையை சேர்ந்த லாரி டிரைவர் அளித்த நிலமோசடி புகாரின் பேரில் 2வது முறையாக கைது செய்யப்பட்டு பாளை.,சிறையில் அடைக்கப்பட்ட தளபதி, அந்த வழக்கிலும் ஜாமீன் பெற்று மதுரை எஸ்பி.,அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மில் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் சங்க உதவி செயலாளர் பலராமன் என்பவர் தளபதி மீது நிலமோசடி புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் தளபதி மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தளபதி மட்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு பாளை.,மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிலமோசடி புகாரில் சிக்கிய மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி மூன்றாவது முறையாக பாளை.,மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.