தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் அதிக அளவு பெய்யாவிட்டாலும் ஓரளவுக்கு பெய்யும். தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் அதிக அளவில் பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை அளவு வருமாறு:-
கோவை மாவட்டம் சின்னகள்ளர் 12 செ.மீ., வால்பாறை 6 செ.மீ., தேவலா 4 செ.மீ., ஊட்டி 3 செ.மீ., குந்தா பாலம் மற்றும் பெரியார் அணை தலா 2 செ.மீ., கூடலூர் பஜார் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இன்றைய வானிலை குறித்து நேற்று சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னையில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. அலைகள் வழக்கத்தை விட உயரமாக வந்தன.