தபால் அலுவலகங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை
தலைமை தபால் நிலையங்களில் மினி "பிரிட்ஜ்' விற்பனை செய்யப்படுகிறது. கோத்ரேஜ் நிறுவனத்தின் "சோட்டா கூல்' என்ற பெயரில் 43 லிட்டர் கொள்ளளவு கொண்ட "ஈசி மினி மொபைல் பிரிட்ஜ்' தலைமை தபால் அலுவலகங்களில் ரூ.3790க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8.9 கிலோ எடையுள்ள இந்த பிரிட்ஜ், சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம்."230 வோல்ட்' மின்சாரத்தில் செயல்பட கூடிய இது, மேலிருந்து திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரீசர் வசதி இல்லை. ஆறு மணிநேரம் வரை "கூலிங்' தாங்கும் வசதி உண்டு. வெளியூர் செல்லும் போது மருந்துகளை பாதுகாக்கவும், லாட்ஜ்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.