டாட்டா மோட்டார்ஸ் விற்பனையில் வளர்ச்சி
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், சென்ற மே மாதத்தில், சர்வதேச அளவில், 96 ஆயிரத்து 89 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 12 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், சொகுசு வகையைச் சேர்ந்த ஜாகுவார் லேண்டு ரோவர் கார் விற்பனை 35 சதவீதம் வளர்ச்சி கண்டு 30 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.இந்நிறுவனத்தின், மொத்த பயணிகள் வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் உயர்ந்து, 20 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வர்த்தக வாகனங்களின் விற்பனையும் 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 45 ஆயிரத்து 25 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், கர்நாடக மாநிலம் தார்வாடில், அமைத்துள்ள கார் தொழிற்சாலையில் உற்பத்தியை துவங்கியுள்ளது. 900 கோடி ரூபாய் முதலீட்டு செலவில், 405 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையில், நேரடியாக 350 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்கட்டமாக, இத்தொழிற்சாலையில், டாட்டா ஏஸ் ஸிப், டாட்டா மேஜிக் ஐரிஸ் ஆகிய வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.