திரைப்பட தயாரிப்பாளராகிறார் நடிகர் சந்தானம்
காமெடியில் கலக்கி வரும் நடிகர் சந்தானம் விரைவில் திரைப்பட தயாரிப்பாளராக மாற உள்ளார். காமெடியை மையப்படுத்தி முதல் படத்தை தயாரிக்க உள்ளார். நடிகர் ஜெய், நடிகை ஹன்சிகா நடிக்கும் அந்தப் படத்தில் தான் வழக்கம்போல காமெடி வேடம் ஏற்று நடிப்பதாக தெரிவித்துள்ளார். இப்படத்தின் பிற தகவல்களை விரைவில் அவர் அறிவிக்க உள்ளார்.