கடையநல்லூரில் வாந்தி, பேதியால் 2 பேர் பலி
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே தற்போது அங்கு வாந்தி, பேதியால் மக்கள் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளனர். சொக்கம்பட்டி, வளையார் குடியிருப்பை சேர்ந்த ராக்கமுத்துவின் மனைவி மாடத்தி (50 வயது) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராக்கம்மாள் (80 வயது) இருவரும் வாந்தி, பேதியால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.