மம்தா ஆதரிப்பார்: காங்கிரஸ் நம்பிக்கை
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு நிச்சயமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஆதரவு அளிப்பார் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையோடு உள்ளதாகக் கூறப்படுகிறது. தனக்கு ஆதரவு அளிக்குமாறு பிரணாப் முகர்ஜியும் மம்தாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அப்துல் கலாம் தான் வேட்பாளர் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.