கலைஞருடன் ரஜினி சந்திப்பு!
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினி இன்று (16.06.2012) காலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.